பொது செய்தி

தமிழ்நாடு

3 முதல்வர் ஒப்புதலுக்கு காத்திருப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை; சென்னை புறநகரில், 31 ஏரிகளை சீரமைத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைக்கும் சிறப்பு திட்டம், முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.சென்னை, வேளச்சேரி -- மேடவாக்கம் சாலையில், 1,600 ஏக்கரில், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி பரந்து விரிந்துள்ளது. அந்த பகுதியை, வனத்துறை வாயிலாக பாதுகாக்கும் திட்டத்தை, 2002ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.வெள்ள நீரை

சென்னை; சென்னை புறநகரில், 31 ஏரிகளை சீரமைத்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைக்கும் சிறப்பு திட்டம், முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.சென்னை, வேளச்சேரி -- மேடவாக்கம் சாலையில், 1,600 ஏக்கரில், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி பரந்து விரிந்துள்ளது. அந்த பகுதியை, வனத்துறை வாயிலாக பாதுகாக்கும் திட்டத்தை, 2002ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.வெள்ள நீரை உள்வாங்கி, கடலுக்கு அனுப்புவதில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பேருதவியாக உள்ளது. தென்சென்னையில், ஜி.எஸ்.டி., சாலை முதல் பள்ளிக்கரணை வரையுள்ள, 31 ஏரிகள் சதுப்பு நிலத்தை சார்ந்து உள்ளன.ஆய்வறிக்கைவனத்துறை ஆதரவில், 'தி நேச்சர் டிரஸ்ட்' என்ற அமைப்பு, 31 ஏரிகளின் நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை, 2014ல் தயாரித்தது. இதன் அடிப்படையில், பொதுப்பணித்துறை, இந்த ஏரிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை உருவாக்கியது.இது குறித்து, தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் திருநாராயணன் கூறியதாவது:தென்சென்னையில் உள்ள, 31 ஏரிகளை ஆழப்படுத்தி ஒருங்கிணைத்தால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பை தவிர்க்கலாம். இதில் வெளியேறும் உபரி நீரை, அடுத்தடுத்த ஏரிகளுக்கும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும் கொண்டு செல்ல, கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கலாம்.சேலையூர், சிட்லபாக்கம் ஏரிகள் கான்கிரீட் கால்வாய்கள் வாயிலாக, செம்பாக்கம் ஏரியுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதை பிற ஏரிகளுக்கும் விரிவுபடுத்தி, சிறப்பு திட்டமாக செயல்படுத்தலாம். எவ்வளவு நீர் வந்தாலும், அதை உள்வாங்கும் திறனுடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. இதில் இருந்து உபரி நீர் வெளியேறும் வழியை மேம்படுத்த வேண்டும்.வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சதுப்பு நிலத்தில், பிற துறையினர் தலையீட்டை தடுக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வடிகால் திட்டங்களுடன், ஏரிகள் இணைப்பையும் சேர்த்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.உறுதிஇது குறித்து, பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:தென்சென்னையில் வெள்ள நீர் வடிகாலுக்கு நிரந்தர தீர்வுக்காக, திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் தொடர்புடைய, 31 ஏரிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது.முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன், நிதி ஆதாரம் உறுதி செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X