பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கண்ணாமூச்சி புறநகரில் கட்டட அனுமதி முடக்கம்

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை; அயல் பணியில் நியமிக்கப்படும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கண்ணாமூச்சி காட்டுவதால், புறநகர் உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி பணிகள் முடங்கியுள்ளன.சென்னை புறநகரில், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகளில் தொழில்நுட்ப பணியிடங்கள் முறையாக இல்லை. இதனால், இங்கு கட்டட அனுமதி கோப்புகளை ஆராய்ந்து முடிவு எடுக்க, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து திட்ட உதவியாளர்கள் அயல் பணியில்
 சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கண்ணாமூச்சி புறநகரில் கட்டட அனுமதி முடக்கம்

சென்னை; அயல் பணியில் நியமிக்கப்படும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கண்ணாமூச்சி காட்டுவதால், புறநகர் உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி பணிகள் முடங்கியுள்ளன.

சென்னை புறநகரில், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகளில் தொழில்நுட்ப பணியிடங்கள் முறையாக இல்லை. இதனால், இங்கு கட்டட அனுமதி கோப்புகளை ஆராய்ந்து முடிவு எடுக்க, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து திட்ட உதவியாளர்கள் அயல் பணியில் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள், முறையாக செயல்படாததால், கட்டட விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய பணியிடங்களில், முறையான அதிகாரிகளை நியமிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:குன்றத்துார் ஒன்றியத்தில் கட்டட அனுமதி பணிகளுக்காக, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து, திட்ட உதவியாளர் விஜயநாராயணன் நியமிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அடுத்து, அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் இடத்துக்கு, திட்ட உதவியாளர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். ஆனால், ரவிச்சந்திரன் அந்த இடத்தில் பணிக்கு சேரவில்லை.இதனால், கட்டட அனுமதி பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக ஏற்பாடாக, இரண்டாம் நிலை திட்ட உதவியாளர் மேதினி தேவி நியமிக்கப்பட்டார். இவராவது அங்கு பொறுப்பேற்று பணிபுரிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், இதுபோன்று பொறுப்பில்லாமல் நடப்பதால், புறநகரில் கட்டட அனுமதி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-டிச-202008:32:23 IST Report Abuse
நடராஜன் இதிலிருந்து என்ன தெரியவருகிறது எனில் லஞ்சம் வாங்காமல் சம்பளத்தை மட்டுமே நம்பி எந்த அரசு அதிகாரியும் வேலை செய்ய தயாரில்லை எனத் தெரிகிறது. இந்த நிலைக்கு ஆளாக்கியதுதான் இரண்டு திருட்டு திராவிட கட்சிகளின் சாதனை. ஏற்கனவே ஆசியர்கள் சம்பளம் மிக மிக அதிகம். ஆனால் அவர்கள் வேலை நாட்கள் வருடம் 240 நாட்கள் தான் வருடத்திற்கு. இந்த மாதிரி எல்லாம் நடந்ததிற்கு கயவர்கள் திமுக முக்கிய காரணம். ஆன்மீக அரசியல் இந்த எல்லாவற்றையும் ஒழிக்கும்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
16-டிச-202007:02:26 IST Report Abuse
Darmavanஇதற்கு விதை போட்டவர் ஆரம்பித்தவர் கட்டுமரம் நாட்டை கெடுத்த தீய சக்தி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X