சென்னை; மாற்றுத்திறனாளிகள், 10 பேருக்கு, 61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட, 'ஸ்கூட்டர்'களை, கலெக்டர் சீதாலட்சுமி நேற்று வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரண்டு கால்கள் பாதித்து, கல்வி பயன்று, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட, பெட்ரோல் 'ஸ்கூட்டர்கள்' இலவசமாக வழங்கப் படுகின்றன.அதன்படி, சென்னை மாவட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல் கட்டமாக, நேற்று, 10 ஸ்கூட்டர்களை, கலெக்டர் சீதாலட்சுமி, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.இதுகுறித்து, மாவட்ட நல அலுவலர் சுப்பிரமணி கூறியதாவது:சென்னை மாவட்டத்தில் வாகனம் பெற, 149 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் கட்டமாக, அவர்களில், 10 பேருக்கு, 61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட, 'ஸ்கூட்டர்கள்' வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு, இம்மாதம் இறுதிக்குள் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE