மணலிபுதுநகர்; மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, டி.வி.எம்., சேவா பாலம் அமைப் பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.சென்னை, உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, டி.வி.எம்., சேவா பாலம் அறக்கட்டளை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உட்பட முப்பெரும் விழா, நேற்று முன்தினம், மணலிபுதுநகர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.அமைப்பின் நிறுவனர் இருளப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு, தையல் இயந்திரம், வாக்கிங் ஸ்டிக், பாய், அரிசி, உணவு பொருட்கள் போன்றவை, 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.விழாவில், செயலர் பெஞ்சமின், போக்குவரத்து உதவி கமிஷனர் வேலுச்சாமி, ஆய்வாளர் சோபிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.கொரோனாவிற்கு பின்பும், பல இன்னல்களை சந்தித்து வரும் தங்களுக்கு, தையல் இயந்திரம், வாக்கிங் ஸ்டிக், நலத்திட்டங்கள் வழங்கிய அறக்கட்டளையினருக்கு, மாற்றுத் திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE