அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணி கட்சிகள் 18ல் உண்ணாவிரதம்

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement
சென்னை : டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், வரும், 18ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.இது தொடர்பாக, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராடி
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், வரும், 18ம் தேதி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டில்லியை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராடி வருகின்றனர்.விவசாயிகளுக்காக, தி.மு.க., தலைமையில் உள்ள அனைத்து கட்சிகளும் உணர்வுப்பூர்வமாக கூட்டாகவும், தனியாகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின்சார திருத்தச் சட்டத்தையும், மத்திய அரசு திரும்ப பெற முன்வரவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், உணவு பாதுகாப்பிற்கு அடித்தளமாகவும் விளங்கும் விவசாயிகளையும், அவர்களின் உரிமைகளையும், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணிக்கின்றன.

இதைக் கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும், வரும், 18ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



கொளத்துாரில் நிவராணம்!


சென்னை, கொளத்துார் தொகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மூன்றாவது கட்டமாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று ஆய்வு செய்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரிசி, பாய், போர்வை, சர்க்கரை, மைதா, பிஸ்கட், எண்ணெய், துவரம் பருப்பு போன்றவை அடங்கிய நிவராண பொருட்களை வழங்கினார்.


தேர்தல் அறிக்கை குழு


4வது சுற்றுப்பயணம் வரும், 27ல், கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்டத்தில் துவங்கி, ஜன., 1, கரூர் மாவட்டம் வரை, ஆறு நாட்கள், தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Raj - TVPM,இந்தியா
15-டிச-202017:07:54 IST Report Abuse
Sundar Raj ஒருத்தர் உண்ணாவிரதம் இருந்து ஒரு லச்சம் பேர கொன்னாரு , இது ஏதுல போய் முடியுமோ ?
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
15-டிச-202016:55:34 IST Report Abuse
மன்னிப்பு சென்னையில் இருக்கும் அனைத்து பஜ்ஜி ,பிரியாணி , வடை , சிறு உணவகங்கள், பெரிய உணவகங்கள் , ஆக மொத்தம் எல்லா உணவகங்களும் பாதுகாப்பு க்கருதி உடனே மூடவும். மற்றும் தமிழகம் அனைத்திலும் இருக்கும் உணவகங்களும் மிக்க பாதுகாப்புடன் இருக்கவும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
15-டிச-202021:04:46 IST Report Abuse
Sathya Dhara உண்மை உண்மை அவசரம்.......
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
15-டிச-202016:42:37 IST Report Abuse
jambukalyan குறைந்தது ஒரு பதினெட்டு நாட்களாவது முழு உண்ணாவிரதம் இருக்குமாறு உங்கள் அனைவரையும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X