சென்னை - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த நான்கு சிறப்பு முகாம்களில், சென்னையில் மட்டும், 1.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.சென்னை மாநகராட்சியில், 39.47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, 2021 ஜன., 1ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைபவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. இதற்காக, சிறப்பு முகாம்கள் நடந்தன. அதில், சென்னையில், 1.25 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். மேலும், பெயர்கள் நீக்கம் செய்ய, 4,800 பேர்; பதிவுகளில் திருத்தம் செய்ய, 13 ஆயிரத்து, 317 பேர்; சட்டசபை தொகுதியில் முகவரி மாற்றத்திற்கு, 19 ஆயிரத்து, 56 பேர் என, 1.62 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE