பொது செய்தி

தமிழ்நாடு

பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு லேப்டாப்

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை - பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற எட்டு மாணவர்களுக்கு, மடிகணினி வழங்கி, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பாராட்டினார்.சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, 'விங்ஸ் டூ பிளை' திட்டத்தின் கீழ், வாழ்க்கைதிறன் குறித்த பல்வேறு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடக்கின்றன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள்,

சென்னை - பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற எட்டு மாணவர்களுக்கு, மடிகணினி வழங்கி, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பாராட்டினார்.சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, 'விங்ஸ் டூ பிளை' திட்டத்தின் கீழ், வாழ்க்கைதிறன் குறித்த பல்வேறு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடக்கின்றன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர்.இந்தாண்டு, 'விங்ஸ் டூ பிளை' திட்டத்தின் கீழ் நடைபெற்ற பேச்சு போட்டியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 32 மாணவர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில், எட்டு மாணவர்கள் இறுதி சுற்றில் வெற்றி பெற்றனர். இந்தாண்டு கொரோனா காரணமாக வெளிநாட்டுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முடியாத நிலையில், மாணவர்களுக்கு மடி கணினி வழங்கி, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பாராட்டு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X