சென்னை - பயிற்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு அச்சகங்களின் பணி வழங்க கோரி, நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.பார்வையற்ற மாற்று திறனாளிகள், தமிழக அரசு அளிக்கும் புத்தகம் கட்டும் பயிற்சியில், பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள், அரசு அச்சகங்களில் பணி வாய்ப்பு கோரி விண்ணப்பித்திருந்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், 52 பேருக்கு மட்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், சிலருக்கு உடனடியாக பணி வழங்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர்.இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கு பல்வேறு வகையில் கொண்டு சென்றும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய அமைப்பின் தலைவர் சகாதேவன் தலைமையில், நேற்று, 40க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்று திறனாளிகள், திருவல்லிக்கேணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய வளாகத்தில் கூடி, காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.துறை கமிஷனர் ஜான் டாம் வர்கீஸ், அமைப்பினருடன் பேச்சு நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறினார்.ஏற்க மறுத்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE