சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தம்; நால்வர் மீது போலீசார் வழக்கு

Added : டிச 15, 2020
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறு அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்திய போலீசார் மணமகன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.மூணாறு அருகே சிட்டிவாரை எஸ்டேட்டைச் சேர்ந்த ராஜேஷ் 25, என்பவருக்கு 16 வயது சிறுமியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. 2021 பிப்ரவரியில் திருமணம் நடத்த முடிவுசெய்தனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள்

மூணாறு : கேரளா மூணாறு அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்திய போலீசார் மணமகன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மூணாறு அருகே சிட்டிவாரை எஸ்டேட்டைச் சேர்ந்த ராஜேஷ் 25, என்பவருக்கு 16 வயது சிறுமியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. 2021 பிப்ரவரியில் திருமணம் நடத்த முடிவுசெய்தனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தேவிகுளம் எஸ்.ஐ., விபின் தலைமையில் போலீசார் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தியதுடன் ராஜேஷ், அவரது தாயார், சிறுமியின் பெற்றோர் என நான்குபேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X