இப்பகுதியில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நெசவுக்கூடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நெசவாளர்களை ஒருங்கிணைத்து கைத்தறி, விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. 25 சங்கம் மூலம் கைலி, வேட்டி, பாலியெஸ்டர் சர்ட்டிங் பீஸ், 40,60,80-ம் நம்பர் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமார்க்கெட்டில் விற்கப்பட்டது.
இதனால் கூட்டுறவு சங்கங்கள் பலவும் லாபத்தில் செயல்பட்டதுடன் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலையும் கிடைத்து வந்தது.நெருக்கடிஜவுளித்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியால் வெளி மார்க்கெட் ரகங்கள் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டது. நெசவாளர்களின் தொடர் வேலைக்காக இலவச சேலை உற்பத்திக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டது. அவர்களும் நவீன ரகங்கள் உற்பத்தியை மறந்து 20 ஆண்டுக்கும் மேலாக இலவச சேலை உற்பத்தியை தொடர்கின்றனர். வெளி மார்க்கெட் ரக உற்பத்தி இல்லாததால் கூட்டுறவு சங்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
நிதி ஆதாரம் இல்லை
அதனை சமாளிக்க முடியாமல் பல மூடப்பட்டன. நெசவாளர்கள் பலரும் மீண்டும் தனியாரிடம் வேலைக்கு சென்று விட்டனர். தற்போது இப்பகுதியில் தள்ளாடும் நிலையில் 8 கைத்தறி, 2 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கும் போதிய நிதி ஆதாரம் இல்லை. ஏற்கனவே அச்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நெசவாளர்களை மீண்டும் ஒருங்கிணைத்து மேம்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். சங்கங்களுக்கு அரசு மறு சீரமைப்பு நிதி, நெசவுக்கான தறி உபகரணங்கள் வழங்கி தொழிலில் நவீன ஜவுளி ரகங்கள் உற்பத்திக்கு நெசவாளர்களை ஊக்கப்படுத்த வழிகாட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.---------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE