மூணாறு : மூணாறில் சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் ஆன் லைன்' முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மூணாறைச்சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில்தொலை தொடர்பு வசதி சரிவர இல்லாததால் ஆன் லைன்' மூலம் கல்வி பெறும் மாணவர்கள்சிரமப்பட்டு வரும் நிலையில்தற்போது ஐயப்ப பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஆன்லைன்' முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எஸ்டேட் பகுதிகளில் தொலை தொடர்பு வசதி இன்றிமுன்பதிவு செய்ய முடியாமல் அவர்கள் தவித்துவருகின்றனர்.
மூணாறில்முன்பதிவு செய்ய முயன்றபோது சம்பந்தப்பட்ட தேவசம்போர்டு இணைய தளம் செயல்படாததால் ஏமாற்றம் அடைந்தனர்.இது சம்பந்தமாகஆலோசனை கூட்டம் மூணாறு ஐயப்ப சேவா சங்கம் சார்பில்நடந்தது. செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். தலைவர் பாலசிங், பொருளாளர் முனியாண்டி உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.தேவிகுளம் சப் கலெக்டர் பிரேம்கிருஷ்ணன் மூலம் பிரச்னையைதேவசம் போர்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE