தேனி : டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலக வாயில் அருகில் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காத்திருக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூ., கட்சி மாநிலக் குழு உறுப்பினர் திருமலைக்கொழுந்து வரவேற்றனர்.தி.மு.க., வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ஆதரவு தெரிவித்து பேசினார்.
நகரப் பொறுப்பாளர் பாலமுருகன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ஜீவா, இந்தியகம்யூ. விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், மார்க்சிஸ்ட் விவசாய சங்க பொருளாளர்சஞ்சீவிக்குமார், இந்திய வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நாகராஜ், மாவட்டத்தலைவர் பிரேம்குமார்உள்ளிட்டோர் பங்கேற்றனர். தி.மு.க.,வினர் சென்றபின் கைதாக மறுத்த விவசாய சங்க நிர்வாகிகள் கண்ணன், எஸ்.எப்.ஐ., மாவட்டத் தலைவர் பிரேம்குமார், செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட 102 பேரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்தனர்.தள்ளுமுள்ளு , வாக்குவாதம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE