கூடலுார் : பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவைக் குறைக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவமழையால் பெரியாறு அணை நீர்மட்டம் அதிகபட்சமாக நவ.21 ல் 128.25 அடியை எட்டியது. அதன்பின் மழையின் தாக்கம் குறைந்ததால் நீர்மட்டமும் சரிந்து நேற்று காலை 8:30 மணிப்படி 124.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக வினாடிக்கு 1311 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக நெல் சாகுபடிக்கான அறுவடை விரைவில் துவங்க உள்ளது.
அதனால் தற்போது தண்ணீர் தேவை குறைவாகும். அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கு முன்திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 127.60 அடியாக இருந்த போது தமிழகப்பகுதிக்கு 1000 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE