சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இணைப்பு ரோட்டில் தடுப்புகளின்றி விபத்திற்குள்ளாகும் வாகனங்கள்

Added : டிச 15, 2020
Share
Advertisement
மதுரை : நெடுஞ்சாலைத்துறையினரின் மெத்தனத்தால் மதுரை மூன்றுமாவடி-அய்யர்பங்களா இணைப்பு ரோட்டில் தடுப்புகளின்றி வாகனங்கள் தொடர்ந்து விபத்திற்குள்ளாகின்றன.வாகனங்கள் திண்டுக்கல் ரோட்டிற்கு நெரிசலின்றி செல்லும் வகையில் மாட்டுத்தாவணி முதல் கூடல்நகர் வரை இணைப்பு ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ரோட்டோர மின்கம்பங்கள் அகற்றப்படாமல் விபத்துக்கள் சகஜமாகி

மதுரை : நெடுஞ்சாலைத்துறையினரின் மெத்தனத்தால் மதுரை மூன்றுமாவடி-அய்யர்பங்களா இணைப்பு ரோட்டில் தடுப்புகளின்றி வாகனங்கள் தொடர்ந்து விபத்திற்குள்ளாகின்றன.

வாகனங்கள் திண்டுக்கல் ரோட்டிற்கு நெரிசலின்றி செல்லும் வகையில் மாட்டுத்தாவணி முதல் கூடல்நகர் வரை இணைப்பு ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ரோட்டோர மின்கம்பங்கள் அகற்றப்படாமல் விபத்துக்கள் சகஜமாகி வருகின்றன. கோசாகுளம் உள்ளிட்ட சில இடங்களில் ரோடு குறுகலாகவுள்ளன. இந்நிலையில் மூன்றுமாவடி முதல் உச்சபரம்புமேடு வரை பெரியாறு பாசன கிளை கால்வாய் இருபுறமும் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சில இடங்களில் தடுப்புகள் அமைக்கவில்லை. ரோட்டை விட கால்வாய் தாழ்வாக உள்ளதால் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கால்வாய் தெரியாமல் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.சமூக ஆர்வலர் நாகராஜன் கூறியதாவது: மூன்றுமாவடி அருகில் சாந்திநகரில் கால்வாய் இருபுறமும் தடுப்புகள் இல்லை. இதனால் அழகர்கோவில் மெயின் ரோட்டிலிருந்து அய்யர்பங்களா செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.

சில நாட்களுக்கு முன்மாநகராட்சி துப்புரவு வாகனம் விபத்திற்குள்ளாகி டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மூன்றுமாவடி முதல் கோசாகுளம் வரை தடுப்புகளை உயரமாக அமைக்க வேண்டும். ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். சில இடங்களில் கால்வாயையொட்டி செடி,கொடிகள் மண்டியுள்ளன. அவற்றை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X