பொது செய்தி

தமிழ்நாடு

எல்.ஐ.சி.,க்கு தன்னாட்சி அதிகாரம்; ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
மதுரை : எல்.ஐ.சி., நிர்வாகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மதுரையில் நடந்த கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.இக்கழக 64வது மாநாடு கோட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இணைச் செயலாளர் விஜயா வரவேற்றார்.தென்மண்டல பொதுச்செயலாளர் செந்தில்குமார் பேசியதாவது: எல்.ஐ.சி., இந்நிதியாண்டில் 3.50 லட்சம் கோடி

மதுரை : எல்.ஐ.சி., நிர்வாகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மதுரையில் நடந்த கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இக்கழக 64வது மாநாடு கோட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இணைச் செயலாளர் விஜயா வரவேற்றார்.தென்மண்டல பொதுச்செயலாளர் செந்தில்குமார் பேசியதாவது: எல்.ஐ.சி., இந்நிதியாண்டில் 3.50 லட்சம் கோடி பிரீமியங்களை மக்களிடமிருந்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

85 சதவீதம் பணம் அரசு துறைகளில் முதலீடு செய்யப்படவுள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தை தனியார்மயமாக்கி பங்குகளை விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். தனியாருக்கு விற்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார்.எல்.ஐ.சி. நிர்வாகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் பிற சேவை மீதான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும் உட்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X