மதுரை : மதுரை ஆவின் பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யா தெரிவித்துள்ளதாவது:அரசு உத்தரவுபடி நிவர் மற்றும் புரவி புயல்கள் பாதிப்பின் போது மாவட்டங்களில் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு மதுரை ஆவின் சார்பில் 19 மெட்ரிக் டன் பால் பவுடர் 500 கிராம் பாக்கெட்டுகளாக வழங்கப்பட்டன. பொங்கல் பை திட்டத்தின் கீழ் மதுரை உட்பட 9 மாவட்டங்களின் பயனாளிகளுக்கு வழங்க 100 மி.லி., அளவில் 2.52 லட்சம் நெய் பாட்டில்கள் தயாரிக்கும் பணி நடக்கின்றன என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE