பொது செய்தி

தமிழ்நாடு

மாவுப் பூச்சிகளை விரட்டும் கிரிப்டோலேமன் வண்டுகள்

Added : டிச 15, 2020
Share
Advertisement
மதுரை : ''தோட்டக்கலை பயிர்களை சேதப்படுத்தும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த, இப்பூச்சிகளை உண்ணும் கிரிப்டோலேமன் மான்ட்ரோசி வண்டுகளை விடலாம்'' என மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் செல்வி, தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:இலையின் அடிப்பகுதி குருத்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடை போல மாவுப்பூச்சி

மதுரை : ''தோட்டக்கலை பயிர்களை சேதப்படுத்தும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த, இப்பூச்சிகளை உண்ணும் கிரிப்டோலேமன் மான்ட்ரோசி வண்டுகளை விடலாம்'' என மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் செல்வி, தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:இலையின் அடிப்பகுதி குருத்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடை போல மாவுப்பூச்சி படர்ந்திருக்கும். அருகில் சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். அதன் மேல் தேன் போன்ற கழிவுகளும் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படுவதால் செடிகளின் இலைகள் வாடி கருகிவிடும்.பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச்செடிகளை பிடுங்கி அகற்றி அதிகம் பரவாமல் தடுக்க வேண்டும்.

பழங்கள் உள்ள தண்டுகளில் 5 செ.மீ., நீளத்திற்கு எண்ணெய் பசையுடைய ஒட்டும் பொறியை வைக்கலாம். கிரிப்டோலேமன் மான்ட்ரோசி வண்டுகள் மாவுப்பூச்சிகளை உண்ணும். ஆண்டுக்கு 3 முறை ஒரு மரத்திற்கு 10 வண்டுகள் வீதம் விடும் போது அவை பூச்சிகளை தின்று கட்டுப்படுத்தும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் மீன் எண்ணெய், ரெசின் சோப் உடன் 2 மில்லி டைகுளோர்வாஸ் மருந்தை கலந்து தெளிக்கலாம். பூச்சி தாக்கிய தண்டுப்பகுதியின் பட்டையை எடுத்துவிட்டு மீதைல் பேரத்தியான் பசையால் பூச வேண்டும். கவாத்து செய்த மரத்தைச் சுற்றி போரேட் குருணை மருந்தை 50 கிராம் வீதம் இடவேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X