பொது செய்தி

தமிழ்நாடு

பக்தி தேவை பணம் அல்ல; பணிவு தான்: எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் பேச்சு

Added : டிச 15, 2020
Share
Advertisement
மதுரை : ''பக்தி தேவை பணம் அல்ல; பணிவு தான்'' என மதுரை தருமபுரஆதீனமடத்தில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த அனுஷ உற்ஸவத்தில் எழுத்தாளர் இந்திராசெளந்தரராஜன் பேசினார்.'ஆழ்வார்களை ஆராதிப்போம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: இறைவனை தங்கள் பக்தியால் ஆட்சி செய்தவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களாலே வைஷ்ணவம் என்னும் பக்தி நெறி உலகறியும் ஒன்றாக மாறியது. இறைவன் பால்

மதுரை : ''பக்தி தேவை பணம் அல்ல; பணிவு தான்'' என மதுரை தருமபுரஆதீனமடத்தில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த அனுஷ உற்ஸவத்தில் எழுத்தாளர் இந்திராசெளந்தரராஜன் பேசினார்.

'ஆழ்வார்களை ஆராதிப்போம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: இறைவனை தங்கள் பக்தியால் ஆட்சி செய்தவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களாலே வைஷ்ணவம் என்னும் பக்தி நெறி உலகறியும் ஒன்றாக மாறியது. இறைவன் பால் ஒருவன் எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்கள் ஆழ்வார்கள்.

செந்தமிழில் இவர்கள் பாடிய பாடல்கள் பிரந்த பாசுரங்கள்.மார்கழி மாதவேளையில் நாம் ஆழ்வார் பெருமக்களை நினைப்பதும், வணங்குவதும் நம்மை பெரிதும் அருளுக்கு ஆளாக்கி விடும். கலியுகத்தில் காட்டுக்கு போய் கஷ்டப்பட்டு புலன்களை அடக்கி தவம் செய்ய தேவையில்லை. ஒரு உற்ற குருவை இறுக்கமாக பிடித்து கொண்டு விட்டால் அவர் நம்மை இறைவனிடம் சேர்த்து விடுவார்.

பக்தியோடும், உண்மையாகவும் இருக்கும் ஒருவர் ஒரு அருகம்புல்லால் கூட பகவானை அர்ச்சிக்கலாம். அதை இறைவன் ஏற்கிறார். இந்த உலகத்தில் பல்வேறு ஆசாபாசத்துடன் வாழ்கிறோம். நம்மிடம் பலவித பலவீனங்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் உள்ள நம் கஷ்டத்திற்கான காரணம் நாம் செய்த கர்மா. எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும். இறைவனாகிய பெருமாளே தேடி வந்து தன் திருவடிகளை நீட்டி ஆட்கொண்டவன் திருமங்கை மன்னர், என்றார். இன்று (டிச., 15) திருமந்திரம் என்ற தலைப்பில் அவர் பேசுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X