திருப்பரங்குன்றம் : கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பல்லக்கில் அஸ்தர தேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள ஆறுமுக சுவாமி சன்னதியில் பூஜைகள் முடிந்து அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
மலைக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். கல்களம் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சொக்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE