பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் மாதிரி நீட் நுழைவு தேர்வு: மதுரை வழிகாட்டுகிறது

Added : டிச 15, 2020
Share
Advertisement
மதுரை : மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக மதுரையில் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் ஆன்லைனில் மாதிரி நீட் நுழைவு தேர்வு நடந்தது.அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த 21 மாணவர்கள் இந்தாண்டு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை 10 மடங்கு அதிகரித்தது. இவர்களுக்கான ஆன்லைன்

மதுரை : மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக மதுரையில் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் ஆன்லைனில் மாதிரி நீட் நுழைவு தேர்வு நடந்தது.

அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த 21 மாணவர்கள் இந்தாண்டு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை 10 மடங்கு அதிகரித்தது. இவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஆன்லைனில் மாதிரி தேர்வு நடந்தது.

இதில் 523 பேர் பங்கேற்றனர். இமெயிலில் வினாத்தாள் அனுப்பப்பட்டது.நீட் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா தேவி, மோசஸ் பாக்கியராஜ், செல்வன் அற்புதராஜ், ராஜசேகர், ஜாக்குலின் ஆகியோர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.

முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், “நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டை விட அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதால் முன்மாதிரியாக மதுரையில் இத்தேர்வு நடத்தியுள்ளோம்” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X