மதுரை : மதுரை நகரில் 7, புறநகரில் 21 என முதற்கட்டமாக மாவட்டத்தில் 28 இடங்களில் 'மினி கிளினிக்'கள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 2 ஆயிரம் 'மினி கிளினிக்'கள் நேற்று துவக்கப்பட்டன. தலா ஒரு டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர்களுடன் இந்த சிறிய மருத்துவமனைகள் செயல்படும். சளி, காய்ச்சல், சிறிய விபத்து காயங்கள், சிறு பாதிப்புகளுக்கு இங்கு சிகிச்சைஅளிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 28 இடங்களில் 'மினி கிளினிக்' அமைகிறது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசு அனுமதி கிடைத்ததும் செயல்பாட்டிற்கு வரும்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இம்மருத்துவமனைகள் மக்களுக்கு பெரிதும் பயன்படும். எதற்கெடுத்தாலும் பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டிற்கு அருகிலேயே சிறிய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற முடியும். காலை 8:00 முதல் பகல் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை 'மினி கிளினிக்'கள் செயல்படும். நகரில் 16 இடங்களில் நிறுவ அனுமதி கோரப்பட்டது. முதற்கட்டமாக 7 இடங்களில் அமைய இருக்கிறது. புறநகரில் 21 இடங்களில் நிறுவப்பட உள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE