பொது செய்தி

தமிழ்நாடு

நாற்று அழுகலுக்கு நோய் மேலாண்மை

Added : டிச 15, 2020
Share
Advertisement
மதுரை : தோட்டக்கலை பயிர்களில் நாற்று அழுகல் நோயால் விவசாயிகள் வருமான இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால்நோய் மேலாண்மை அவசியமாகிறது. இதுபற்றி மதுரை வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:இந்நோயால் முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்றுகள் இறந்து விடுகின்றன.முளைத்தபின் நோய் வந்தால் திசுக்கள் பாதிப்படைந்து

மதுரை : தோட்டக்கலை பயிர்களில் நாற்று அழுகல் நோயால் விவசாயிகள் வருமான இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால்நோய் மேலாண்மை அவசியமாகிறது.

இதுபற்றி மதுரை வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:இந்நோயால் முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்றுகள் இறந்து விடுகின்றன.முளைத்தபின் நோய் வந்தால் திசுக்கள் பாதிப்படைந்து உடைந்துவிடும். நாற்றாங்காலில் தண்ணீர் தேங்குவதாலும் மழை தொடர்ந்து பெய்வதாலும் இந்த நோய் ஏற்படும்.

இப்பிரச்னை தீர வேண்டுமெனில் விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்தோ அல்லது ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் மருந்து கலந்தோ விதை நேர்த்திசெய்யலாம்.ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலந்து சதுரமீட்டருக்கு 4 லிட்டர் என்ற அளவில் செடிகளின் வேர்கள் நனையும் படி ஊற்ற வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X