குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: மீனாம்பாள்புரம் ஜிங்கிலி என்ற விஜய் 22.கொலை முயற்சி வழக்கு உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.வீட்டில் கொள்ளைதிருமங்கலம்: சீயோன் நகர் வெங்கடாசலம் மனைவி விஜயா 52. நேற்று அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர், விஜயாவை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி அணிந்திருந்த செயின், தோடு, வெள்ளி பொருட்கள், ரூ.6 ஆயிரம் மற்றும்அலைபேசியை கொள்ளையடித்து தப்பினார்.
இரட்டையர்களுக்கு வெட்டு
திருமங்கலம்: பெருங்காமநல்லுார் இரட்டையர்கள் மது 28, மாதவன் 28, மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. மதுரை நீதிமன்ற விசாரணையில் ஆஜராகிவிட்டு, டூவீலரில் நேற்று திரும்பியவர்களை திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் சாத்தங்குடி பாலம் அருகே கார், டூவீலரில் வந்த 8 பேர் வழிமறித்தனர். மக்காச்சோள காட்டுக்குள் தப்பி ஓடிய மதுவை விரட்டி வெட்டினர். மாதவன் மீது அரிவாள், கற்களை வீசியதில் காயம் ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
மதுரை: வில்லாபுரம் ஹவுசிங் போர்டு கொத்தனார் செல்வராஜ் 35. நேற்று காலை சிம்மக்கல் தைக்கால்தெருவில் உள்ள முத்துலட்சுமி என்பவர் கட்டடத்தில் சாரம்கட்டி பூச்சு வேலையில் ஈடுபட்டார். அப்போது நிலைத்தடுமாறி உயர் அழுத்த மின் கம்பி மீது உரசியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடலை நகர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் தேர்வால் தற்கொலை
மதுரை: ஆனையூர் ஹவுசிங் போர்டு வினோத்குமார் 24. போலீஸ் பணியில் சேர ஆர்வமாக இருந்த நிலையில், எழுத்துத்தேர்வுக்கு தயாராக வில்லை. தேர்விலும் பங்கேற்கவில்லை. மனஅழுத்தத்திற்குள்ளாகி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE