அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி கட்சிக்கு ‛மக்கள் சேவை கட்சி' பெயர், ‛ஆட்டோ' சின்னம்?

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (136)
Share
Advertisement
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சிக்கு, ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு ‛ஆட்டோ' சின்னம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் ரஜினி, ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு வரும் டிச.,31ல் வெளியிடப்படும் எனவும் ரஜினி உறுதியாக கூறினார். மேலும், தமிழகத்தின் 234
Rajinikanth, MakkalSevaiKatchi, Auto

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சிக்கு, ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு ‛ஆட்டோ' சின்னம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினி, ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு வரும் டிச.,31ல் வெளியிடப்படும் எனவும் ரஜினி உறுதியாக கூறினார். மேலும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கிய ரஜினி, கட்சிக்காக சில பெயர்களை பரிசீலனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், நடிகர் ரஜினி, ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி, ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என உள்ளதாகவும், ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதற்கு பதிலாக 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இ்நதிய தேர்தல் ஆணையம் ஒதுக்கியதாக தகவல் தெரிவிக்கின்றன.


latest tamil news




காந்திய மக்கள் இயக்கம் இணைப்பு?


நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சியுடன், காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க, ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர், தமிழருவி மணியன் முடிவு செய்துள்ளார். தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்தில், மாநில நிர்வாகிகள், வருவாய் மாவட்ட அடிப்படையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுதும் ஏராளமானோர் உள்ளனர்.அவர்கள் அனைவரும், ரஜினி கட்சி துவக்குகிற மாநாட்டில் இணைய திட்டமிட்டுள்ளனர். இந்த இணைப்புக்கு பின், காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகளும், ரஜினி கட்சியின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக, மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
21-டிச-202019:11:11 IST Report Abuse
Murthy மண்டபத்துக்கு கட்டவேண்டிய சேவை வரியை கட்டியாகிச்சசா?
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
21-டிச-202018:14:14 IST Report Abuse
krish சின்னம் முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம், மக்களிடம் செல்வாக்கு, மக்கள் வைக்கும் நம்பிக்கை, ஆளும், பிரதான எதிர்கட்சி மீது உள்ள மக்கள் அதிருப்தி வாக்குகள் மூலம் வெளிப்பாடு, தீவிர பிரச்சாரத்திற்கான பணபலம். வேட்பாளர் தராதரம். எல்லாம் கூடி வந்தால் தான் வெற்றிவாய்ப்பு.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
19-டிச-202019:59:14 IST Report Abuse
ponssasi கட்சி ஆரம்பித்து கொள்கைகளை சொல்லட்டும் அப்புறம் கருத்து போடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X