கோபி: கொரோனா ஊரடங்கு தளர்வால், 274 நாட்களுக்கு பின், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். கிருமி நாசினி வழங்கி, கைகளை சுத்தம் செய்த பிறகே, தடுப்பணைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அடிப்படை கட்டமைப்பு பணி நடப்பதால், தடுப்பணையில் குளிக்க, அனுமதிக்கவில்லை. ஆனால், மறுகரையான பெரிய கொடிவேரி கரையில், மணல் போக்கி அருகே குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஒன்பது மாதத்துக்குப் பிறகு, தடுப்பணை அருவியில் குளிக்க கனவோடு வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். செலவழித்த நுழைவு கட்டணத்துக்காக, பூங்காவில் பொழுதை கழித்தனர். 400க்கும் குறைவான பயணிகளே வந்தனர். முக கவசம் அணியாத பயணிகளுக்கு, தடுப்பணை வளாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE