ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அரசு அனுமதியின்றி, கூடுதல் விலைக்கு விற்கப்படும் மதுபாட்டில்களை, இப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் நேற்று கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், நவ., மாத இறுதி வரை, 12 ஆயிரத்து, 309 மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 39 பெண்கள் உள்ளிட்ட, 2,951 பேர் மீது, 2,937 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில மதுபாட்டில், 2,750 பறிமுதல் செய்து, 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை, 41 டூவீலர்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, 21 லட்சம் ரூபாய் வருவாயாக பெறப்பட்டது. 13 டூவீலர்கள் ஏலம் விட தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE