பொது செய்தி

தமிழ்நாடு

20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க., மனு

Added : டிச 15, 2020
Share
Advertisement
சேலம்: வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, பா.ம.க., சார்பில் நேற்று, 47 இடங்களில், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. சேலத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், மாநில துணை பொதுச்செயலாளர் அருள், பசுமை தாயக அமைப்பாளர் சத்ரியசேகர் ஆகியோர் தலைமையில், சத்திரம், பால் மார்க்கெட், வண்டிபேட்டை, பெரியபுதூர் உட்பட, 47 இடங்களில் கிராம

சேலம்: வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, பா.ம.க., சார்பில் நேற்று, 47 இடங்களில், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. சேலத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், மாநில துணை பொதுச்செயலாளர் அருள், பசுமை தாயக அமைப்பாளர் சத்ரியசேகர் ஆகியோர் தலைமையில், சத்திரம், பால் மார்க்கெட், வண்டிபேட்டை, பெரியபுதூர் உட்பட, 47 இடங்களில் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு, ஊர்வலமாக வந்து கோஷம் எழுப்பி முற்றுகையிட்டு, கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கினர்.

* ஓமலூரில், பா.ம.க., நகர செயலாளர் சாய்சுதன் தலைமையில், 60க்கும் மேற்பட்ட கட்சியினர், ஓமலூர் வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் மனு அளித்தனர்.


* திப்பம்பட்டியில், கிழக்கு ஒன்றிய செயலர் மாதேஸ்வரன், பனமரத்துப்பட்டியில், நகர செயலர் ஜனார்த்தனன், வாழக்குட்டப்பட்டியில் தெற்கு ஒன்றிய செயலர் செந்தமிழ்செல்வம், மல்லூரில் மாவட்ட பொறுப்பாளர் மாது, நாழிக்கல்பட்டியில் வடக்கு ஒன்றிய செயலர் சதீஷ்குமார் தலைமையில், வி.ஏ.ஓ., அலுவலங்களில் மனு அளித்தனர்.


* ஆத்தூர் டவுன் வி.ஏ.ஓ., அலுவலகம் முன், பா.ம.க., மாவட்ட செயலர் நடராஜன், ஆத்தூர் நகர செயலர் மணிகண்டன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் வி.ஏ.ஓ., முகிலனிடம் மனு வழங்கினர். ஆத்தூர், கெங்கவல்லி தாலுகா பகுதியில், 86 இடங்களில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.

* சங்ககிரி, தேவண்ணக்கவுண்டனூர் வி.ஏ.ஓ., அலுவலகம் முன், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் வி.ஏ.ஓ., முருகனிடம் மனு அளித்தனர்.


* தலைவாசலில், 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், கிராம நிர்வாக அலுவலகங்கள் அருகில், பா.ம.க.,வினர் திரண்டு வந்து, கல்வி, வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X