சேலம்: சேலத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் பிரிவு மாநில துணை செயலாளர் கொரோனாவுக்கு பலியானார்.
சேலம், மெய்யனூர், புதுத்தெருவை சேர்ந்த பழனிவேல் மனைவி ரம்யா, 45. இவர், 2015ல் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பிளக்ஸ் பேனர் கடை நடத்தி வந்தார். கடையில், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, வெண்ணிலா தம்பதியரின் மகன் கார்த்தி, 30, வேலை செய்து வந்துள்ளார். அவர் கடையில் முன்பணம் வாங்கிக் கொண்டு, வேலைக்கு வராமல் நின்று விட்டார். இது தொடர்பாக, ரம்யா, வெண்ணிலா இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வெண்ணிலாவுக்கு ஆதரவாக, மணக்காட்டை சேர்ந்த வி.சி. கட்சி தேர்தல் பிரிவு மாநில துணை செயலாளர் புத்தபிரியன் பஞ்சாயத்து பேசியபோது, மோதல் வெடித்தது. பள்ளப்பட்டி போலீசார், புத்தபிரியன் தவிர மற்றவர்களை கைது செய்தனர். புத்தபிரியன் தன்னை வழக்கில் ஆஜராவதில் இருந்து, விலக்கு அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி மனுதாக்கல் செய்யும்படி தெரிவித்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. சேலம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த போதிலும் ஆஜராகததால், கடந்த நவ.,4ல், புத்தபிரியனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். அவருக்கு சர்க்கரை நோயின் தாக்கத்தால், கால் வலி ஏற்படவே, நவ.,21ல் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில், நவ.,30ல் சேர்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், நேற்று மாலை அவர் பலியானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE