சேலம்: சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், மாவட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நேற்று போராட்டம் நடந்தது. கூட்டமைப்பு செயலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.
* ம.தி.மு.க., மாநகர் செயலர் ஆனந்தராஜ் தலைமையில், அக்கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆயத்தமான இரு பெண்கள் உள்பட, 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
* சேலத்தில், தமிழக விவசாயிகள் சங்க நாராயணசாமி நாயுடு அணியை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், தலைவர் வேலுசாமி தலைமையில், 60 பேர் சேலத்தில், ரயிலை மறிக்க வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
* டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சேலத்தில் தனியார் மால் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, 93 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE