பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி சீட்டு: இருளர் இன மக்கள் கலெக்டரிடம் மனு

Added : டிச 15, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி சீட்டு கேட்டு, இருளர் இன மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். போச்சம்பள்ளி, பென்ஹள்ளி எம்.ஜி.ஆர்., நகர் இருளர் காலனி மக்கள் நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: போச்சம்பள்ளியில் உள்ள, 30 கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக்கிறோம். நாங்கள்,

கிருஷ்ணகிரி: வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி சீட்டு கேட்டு, இருளர் இன மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். போச்சம்பள்ளி, பென்ஹள்ளி எம்.ஜி.ஆர்., நகர் இருளர் காலனி மக்கள் நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: போச்சம்பள்ளியில் உள்ள, 30 கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக்கிறோம். நாங்கள், காலம் காலமாக அருகிலுள்ள காடுகளில் தேன், கிழங்கு, புளியங்காய், சீதாகாய் மற்றும் நெல்லிக்காய்களை பறித்து, பிழைப்பு நடத்தி வருகிறோம். இதற்காக, காட்டிற்கு செல்ல வனத்துறை, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர், மற்றும் கலெக்டர் ஆகியோர் கையெழுத்திட்ட அடையாளச்சீட்டு வழங்கக்கேட்டு பல ஆண்டுகளாக, மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தேனி மாவட்டத்திலுள்ள, இருளர் இன மக்களுக்கு, அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, முன்னாள் கலெக்டர் பிரபாகரிடம் தெரிவித்த போது, தகுதியுள்ள நபர்களுக்கு, அனுமதி சீட்டு வழங்கலாம் என அவர் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் இதுவரை, எங்களுக்கு அனுமதி சீட்டு கிடைக்காமல் உள்ளது. இதனால், எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, வரும், மே மாதம், பெரியமலை வனதேவதை திருவிழாவை நடத்துவதிலும், சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X