பொது செய்தி

தமிழ்நாடு

பாரூர் பெரிய ஏரியிலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: இரண்டாம் போக சாகுபடிக்கு, பாரூர் பெரிய ஏரியில் இருந்து, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.போச்சம்பள்ளி, பாரூர் பெரிய ஏரியிலிருந்து, இரண்டாம் போக பாசனத்துக்கு, தமிழக முதல்வர் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார். அதன்படி, பாரூர் ஏரியிலிருந்து ஆர்.டி.ஓ., கற்பகவள்ளி நேற்று, தண்ணீரை திறந்து வைத்தார். இதில், 2397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், டிச., 14 முதல், ஏப்., 12

கிருஷ்ணகிரி: இரண்டாம் போக சாகுபடிக்கு, பாரூர் பெரிய ஏரியில் இருந்து, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.


போச்சம்பள்ளி, பாரூர் பெரிய ஏரியிலிருந்து, இரண்டாம் போக பாசனத்துக்கு, தமிழக முதல்வர் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார். அதன்படி, பாரூர் ஏரியிலிருந்து ஆர்.டி.ஓ., கற்பகவள்ளி நேற்று, தண்ணீரை திறந்து வைத்தார். இதில், 2397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், டிச., 14 முதல், ஏப்., 12 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப் படுகிறது. பாரூர் பெரிய ஏரியிலிருந்து, கிழக்கு பிரதான வாய்க்கால் மூலம் வினாடிக்கு, 50 கன அடி, மேற்கு பிரதான வாய்க்காலில், 20 கன அடி என மொத்தம், 70 கன அடி என, 120 நாட்களுக்கு, முதல் ஐந்து நாட்களுக்கு, நாற்று விட தண்ணீர் விட்டு, பிறகு முறைப்பாசனம் வைத்து, மூன்று நாட்கள் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டும், நான்கு நாட்கள் மதகை மூடி வைத்தும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், ஆறு பஞ்சாயத்தை சேர்ந்த, கிழக்கு வாய்க்கால் மூலம், 1583.75 ஏக்கர் நிலம், மேற்கு வாய்க்கால் மூலம், 813.67 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு பிறகு, எக்காரணத்தை கொண்டும் கால நீடிப்பு செய்து, பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட மாட்டாது என்றும், பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், போச்சம்பள்ளி தாசில்தார் ஆஞ்சநேயலு, காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., வேடியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X