கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில், வன்னியர்களுக்கு, 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி, பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில், நேற்று, வி.ஏ.ஓ., அலுவலகங்கள் முன், மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், 356 இடங்களில், அந்தந்த வி.ஏ.ஓ., அலுவலகத்தில், 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி, வி.ஏ.ஓ., அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ம.க., மாநில துணை பொதுசெயலாளர் வக்கீல் இளங்கோ தலைமை வகித்தார்.
* தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சாமிசெட்டிப்பட்டியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில், பா.ம.க., மாநில துணை செயலாளர் வெங்கடேஷ்வரன் தலைமையில், பா.ம.க., வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர், மனு அளித்தனர். இதே போன்று, மாவட்டத்திலுள்ள, 261 பஞ்.,க்களில், 259 பஞ்.,களில் நேற்று, பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
* அரூரில், வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷிடம் பா.ம.க.,வினர் மனு அளித்தனர்.
* ஓசூர், ராயக்கோட்டை சாலை சந்திப்பிலுள்ள பண்டாஞ்சநேயர் கோவில் அருகே துவங்கி, சார்நிலை கருவூலம் அருகே உள்ள, சென்னத்தூர் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு, பா.ம.க., மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், கட்சியினர் ஊர்வலமாக சென்று, வி.ஏ.ஓ.,க்கள் முருகன், லோகநாதன் ஆகியோரிடம் மனு வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE