பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மீது எஸ்.பி., ஆபீசில் பண மோசடி புகார்

Added : டிச 15, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: போளூர் தொகுதி, அ.தி.மு.க., மாஜி பெண் எம்.எல்.ஏ., மீது, பண மோசடி குறித்து, திருவண்ணாமலை, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி; இவர், ஸ்ரீ சிவசக்தி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி அ.தி.மு.க., - மாஜி எம்.எல்.ஏ., ஜெயசுதா மீது, திருவண்ணாமலை மாவட்ட

திருவண்ணாமலை: போளூர் தொகுதி, அ.தி.மு.க., மாஜி பெண் எம்.எல்.ஏ., மீது, பண மோசடி குறித்து, திருவண்ணாமலை, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி; இவர், ஸ்ரீ சிவசக்தி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி அ.தி.மு.க., - மாஜி எம்.எல்.ஏ., ஜெயசுதா மீது, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: போளூர் தொகுதி, அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., ஜெயசுதா, பள்ளிகளுக்கு பென்ச் மற்றும் டெஸ்க் செய்ய, கடந்த, 2015 - 2016ல், எம்.எல்.ஏ., நிதியிலிருந்து ஆர்டர் தருவதாக, கூறி, 25 லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றார். அதில், 12 லட்சம் ரூபாய்க்கான ஆர்டரை கொடுத்தார். மீதமுள்ள, 12 லட்சம் ரூபாய்க்கான ஆர்டரை வழங்காமல், பணத்தை மோசடி செய்து விட்டார். அவரிடம் பலமுறை கேட்டும் தரவில்லை. எனவே, வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகிறேன். எனவே, மாஜி எம்.எல்.ஏ., ஜெயசுதாவிடம் இருந்து, பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X