சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் மது, பணத்தை அள்ளிச்சென்ற கும்பல்: நள்ளிரவில் காவலாளிகளை மிரட்டி துணிகரம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, டாஸ்மாக் பார் காவலாளிகளை மிரட்டிய கும்பல், மது பாட்டில், பணத்தை கொள்ளையடித்து சென்றது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே பாசூரில், காவிரி பேரேஜ் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. கடை விற்பனையாளர் முகமது ரபீக், 37, சூபர்வைசர் கதிர்வேல், 49, நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றனர்.

மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, டாஸ்மாக் பார் காவலாளிகளை மிரட்டிய கும்பல், மது பாட்டில், பணத்தை கொள்ளையடித்து சென்றது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே பாசூரில், காவிரி பேரேஜ் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. கடை விற்பனையாளர் முகமது ரபீக், 37, சூபர்வைசர் கதிர்வேல், 49, நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றனர். கடையை ஒட்டியுள்ள பாரில் கருமாண்டாம்பாளையத்தை சேர்ந்த கருப்பணன், 50, மதுரையை சேர்ந்த சின்னத்தம்பி, 52, காவல் பணியில் இருந்தனர். நள்ளிரவு, 1:00 மணியளவில், 8 பேர் கத்தி, கடப்பாரையுடன் வந்தனர். தூங்கி கொண்டிருந்த பார் காவலாளிகளை எழுப்பினர். சத்தமிட்டால் குத்தி கொன்று விடுவோம் என மிரட்டி, கடை முன் உட்கார வைத்தனர். பின், டாஸ்மாக் கடை பூட்டை கம்பியால் உடைத்து, உள்ளே சென்றனர். கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த, 10 ஆயிரம் ரூபாய், 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 208 மதுபாட்டில்கள், இரண்டு 'சிசிடிவி' கேமராக்களை கொள்ளையடித்து, சாவகாசமாக சென்றுள்ளனர். அதிகாலை, 3:30 மணியளவில், முகமது ரபீக், கதிர்வேலுக்கு காவலாளிகள் தகவல் தந்தனர். கடைக்கு வந்த அவர்கள், சம்பவத்தை உறுதி செய்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசில் புகார் தந்தனர். பெருந்துறை டி.எஸ்.பி., செல்வராஜ், மலையம்பாளையம் போலீசார், கடையில் ஆய்வு செய்து, காவலாளிகளிடம் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்து, மது பாட்டில், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம், டாஸ்மாக் ஊழியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X