பொது செய்தி

தமிழ்நாடு

பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை: ஈரோட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி

Added : டிச 15, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு, ஸ்ரீபதி அசோசியேட் (பி) லிமிடெட் நிறுவனம், 1989ம் ஆண்டு முதல் செயல்படுகிறது.ஸ்ரீபதி பெயரில் ரியல் எஸ்டேட், பஸ் டிரான்ஸ்போர்ட், கட்டுமானம், திருமண மண்டபம், கரூரில் கல் குவாரி, மசாலா நிறுவனம், கட்டுமான பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்கின்றனர். அரசு அலுவலகங்கள், மருத்துவ கல்லூரி, பாலங்கள் உள்ளிட்ட, பல

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு, ஸ்ரீபதி அசோசியேட் (பி) லிமிடெட் நிறுவனம், 1989ம் ஆண்டு முதல் செயல்படுகிறது.


ஸ்ரீபதி பெயரில் ரியல் எஸ்டேட், பஸ் டிரான்ஸ்போர்ட், கட்டுமானம், திருமண மண்டபம், கரூரில் கல் குவாரி, மசாலா நிறுவனம், கட்டுமான பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்கின்றனர். அரசு அலுவலகங்கள், மருத்துவ கல்லூரி, பாலங்கள் உள்ளிட்ட, பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டுமான பணிகளை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்து வருகிறது. இயக்குனர்களாக சேகர், இவரது சகோதரர் பூபதி மற்றும் சீனிவாச மூர்த்தி உள்ளனர். ஈரோடு தங்க பெருமாள் வீதியில் உள்ள, ஸ்ரீபதி அசோசியேட் அலுவலகத்துக்கு, 35க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலை வந்தனர். வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இயக்குனர்களின் உறவினர், நண்பர்கள் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே சமயத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இரவு, 9:30 மணியை கடந்து சோதனை நீடித்தது. இந்நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில், அரசு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில், கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X