ஆரணி: ஆரணி அருகே, பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், வாலிபர் உள்பட இருவர் பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் ஐயப்பன், 28; சென்னையிலுள்ள, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, கஸ்தம்பாடியிலிருந்து, போளூருக்கு, ஸ்பி?ளெண்டர் பைக்கில் சென்றார். வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே, ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்த ராகவன், 54, என்பவர், அப்பாச்சி பைக்கில் எதிரே வந்தார். இரு பைக்குகளும், நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும், படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாயினர். இது குறித்து, களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE