ராணிப்பேட்டை: கிசான் திட்டத்தில், மோசடி செய்த, 800 பேரிடம் பணத்தை மீட்க, வேளாண் துறையினர், அவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினர்.
மத்திய அரசின், கிசான் திட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு, மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது. இதில் இதுவரை, 1.30 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், அரியானா என, வெளி மாநிலங்களை சேர்ந்த, 800 பேர், போலி விலாசம் கொடுத்து, 20 லட்சம் ரூபாய் அளவுக்கு, மோசடி செய்து, அவரவர் வங்கி கணக்கு மூலம் பெற்றுள்ளனர். அத்தொகையை திருப்பி செலுத்த, அவர்களது மொபைல்போனுக்கு, வேளாண் துறையினர் நேற்று, எஸ்.எம்.எஸ்., அனுப்பினர். இது குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: இது போன்று, எஸ்.எம்.எஸ்., தொடர்ந்து மூன்று நாட்கள் அனுப்பப்படும். அதன் பிறகும் அவர்கள், பணத்தை வங்கியில் செலுத்தா விட்டால், அவர்கள் மீது, அந்தந்த பகுதியிலுள்ள, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE