புதுடில்லி: 'ராஜ்யசபா எம்.பி.யாக நான் தேர்வு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை' என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் கடந்த லோக்சபா தேர்தலில் வென்றனர். இதையடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவியை அவர்கள் ராஜினாமா செய்தனர். குஜராதில் அந்த இரண்டு இடங்களுக்கு தனித் தனியாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் இரண்டிலும் பா.ஜ. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இதில் அடக்கம். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த காங்.,கை சேர்ந்த கவுரவ் பாண்டயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜெய்சங்கர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்; அதில் அவர் கூறியுள்ளதாவது: ஒரு மாநிலத்தில் இரண்டு ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனத்திலோ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலோ குறிப்பிடப்படவில்லை. அதனால் என்னுடைய வெற்றி செல்லும். ஆனால் சட்டவிதிகளை தவறாகப் பயன்படுத்தி தொடர்ந்து இதுபோன்று வழக்குகளை மனுதாரர் தாக்கல் செய்து வருகிறார்; அதை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு வரும் ஜன., மூன்றாவது வாரத்தில் விசாரணைக்கு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE