பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கு நிறைவுபெறாத ‛நீட்ஸ் ' திட்டம்: தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
த ன்னிறைவு இந்தியாவாக உருவெடுக்க, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முழுமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. சீனா போன்ற வெளிநாடுகளை சார்ந்திருக்காமல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.தொழில் முனைவோரை, பொருளாதாரம் சார்ந்த உதவிகள் வாயிலாக ஊக்குவிக்க, புதிய தொழில்முனைவோரை உருவாக்கும்

த ன்னிறைவு இந்தியாவாக உருவெடுக்க, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முழுமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. சீனா போன்ற வெளிநாடுகளை சார்ந்திருக்காமல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.தொழில் முனைவோரை, பொருளாதாரம் சார்ந்த உதவிகள் வாயிலாக ஊக்குவிக்க, புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நடவடிக்கையில், தமிழகத்தில் மாவட்ட தொழில் மையங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.கோவை மாவட்ட தொழில் மையத்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், இளைஞர் மேம்பாட்டு திட்டம் என, பல்வேறு திட்டங்களில் கடன்பெற தொழில்துறையினர் வழி நடத்தப்பட்டு வருகின்றனர்.இதில், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) முக்கிய அங்கம் வகித்து வருகிறது. திட்டத்தின்கீழ், 10 லட்சம் முதல், 5 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி, சேவை தொழில்களை துவங்கலாம். இதற்கென தமிழக அரசு, 25 சதவீதம் வழங்குகிறது.இதில் பயன்பெற, msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய தொழில்முனைவோரை உருவாக்க அரசு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இதுபோன்ற திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள மாவட்ட தொழில் மையம் அழைப்பு விடுத்துள்ளது.மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் கூறியதாவது:கோவை மாவட்டத்துக்கு, 2020 - 21ம் நிதியாண்டில், 4.90 கோடி மானியத்தொகை 'நீட்ஸ்' திட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 2.98 கோடி இலக்கு இதுவரை அடைந்துள்ளது.கடந்த, 2019 - 20ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட, 6.66 கோடி இலக்கையும் தாண்டி, 9.15 கோடி என கூடுதலாகவே தொழில்முனைவோர் பயன்பெற்றனர். வியாழன்தோறும் மதியம், 3:00 மணிக்கு, 79287703871 என்ற கூட்ட குறியீட்டு எண், Gmdic என்ற கடவு சொல் வாயிலாக நடக்கும் 'ஜூம் மீட்டிங்'கில் திட்டங்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X