திருவனந்தபுரம்: சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு மேலும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 220 ஆக உயர்ந்துள்ளது.
சபரிமலை கோவிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசார், தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உருவானது. இதனையடுத்து சபரிமலையில் இதுவரை 220க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள தேவஸ்தான நிர்வாகம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE