குடும்ப சொத்து பிரச்னையில் பினாமி சட்டம் பொருந்துமா| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

குடும்ப சொத்து பிரச்னையில் பினாமி சட்டம் பொருந்துமா

Added : டிச 15, 2020
Share
நான் மைனராக இருந்தபோது எனது அண்ணன் பெயரில் தந்தை வீடு வாங்கினார். தற்போது தந்தை உயிருடன் இல்லை. நான் திருமணமாகி கணவருடன் வசிக்கிறேன். அது தன் தனித்த சொத்து எனக்கூறி வீட்டை விற்க அண்ணன் முயற்சிக்கிறார். அச்சொத்து குடும்ப வியாபார வருமானத்திலிருந்து வாங்கப்பட்டது. சொத்தில் பங்கு கேட்டால் பினாமி தடை சட்டப்படி வழக்கு தொடருவேன் என மிரட்டுகிறார். சட்டத்தின்


நான் மைனராக இருந்தபோது எனது அண்ணன் பெயரில் தந்தை வீடு வாங்கினார். தற்போது தந்தை உயிருடன் இல்லை. நான் திருமணமாகி கணவருடன் வசிக்கிறேன். அது தன் தனித்த சொத்து எனக்கூறி வீட்டை விற்க அண்ணன் முயற்சிக்கிறார். அச்சொத்து குடும்ப வியாபார வருமானத்திலிருந்து வாங்கப்பட்டது. சொத்தில் பங்கு கேட்டால் பினாமி தடை சட்டப்படி வழக்கு தொடருவேன் என மிரட்டுகிறார். சட்டத்தின் நிலை?



சிவில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். குடும்ப வியாபார வருமானத்திலிருந்து அச்சொத்து வாங்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் பினாமி தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது.


என் தந்தை தனக்கு தனித்த பாத்திய சொத்தினை என் பெயரில் முழு உரிமைக்கும், என் தாயாரின் வாழ்நாள் அனுபவத்திற்கும் தான பத்திரம் எழுதிக் கொடுத்தார். குடும்ப கடனை நான் அடைக்க வேண்டும் என்றும், என் தாயாரின் ஆயுட்காலத்திற்கு பின் நான் விற்கலாம் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். கடனை அடைத்துவிட்டேன். இந்நிலையில் என் தாயார் சொத்தினை வேறு ஒருவருக்கு கிரையம் செய்துவிட்டார். நான் வட மாநிலத்தில் பணிபுரிகிறேன். தீர்வு?



நாளிதழில் பொது அறிவிப்பு செய்து மேற்கொண்டு சொத்தில் வில்லங்கம் செய்யக்கூடாது என்ற உங்கள் ஆட்சேபனை மற்றும் எச்சரிக்கையினை விடுக்கவும். விற்றவர், வாங்கியவர் மீது விற்பனை செல்லாது என விளம்புகை வழக்கு தாக்கல் செய்யவும். சொத்தின் சுவாதீனத்தை கேட்கவும். பதிவுத் துறையை தரப்பினராக வழக்கில் சேர்ப்பது நல்லது.

வீ.எஸ்.கார்த்தி, வழக்கறிஞர்

0452- - 423 0666 (மாலை 5:00 - 8:00 வரை)

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X