பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலை பிரசாதம் 'ஆன்லைன்' முன்பதிவு

Added : டிச 15, 2020
Share
Advertisement
கோவை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசாதம், தபால் வழியாக பெறுவதற்கான முன்பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என, தபால்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா காரணமாக, பக்தர்கள் சபரிமலைக்கு வரமுடியாத சூழ்நிலையில், பிரசாதங்களை தபாலில் அனுப்ப, திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம், தபால்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தபால்நிலையத்தில், மின்னணு முறையில் பணம் செலுத்தி, முன்பதிவு

கோவை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசாதம், தபால் வழியாக பெறுவதற்கான முன்பதிவை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என, தபால்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக, பக்தர்கள் சபரிமலைக்கு வரமுடியாத சூழ்நிலையில், பிரசாதங்களை தபாலில் அனுப்ப, திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம், தபால்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தபால்நிலையத்தில், மின்னணு முறையில் பணம் செலுத்தி, முன்பதிவு செய்தால், அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி, அர்ச்சனை பிரசாதம், விரைவு தபாலில் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான கட்டணம், 450 ரூபாய். ஒரு விண்ணப்பத்தில், 10 பிரசாத பார்சல் வரை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேவைப்படுவோர், கூடுதலான விண்ணப் பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தபால்நிலையத்துக்கு நேரில் வர முடியாதவர்களுக்காக, 'ஆன்லைன்' முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://www.ayyappaprasadam.com என்ற இணையதள முகவரியில், தேவையான தகவல் அளித்து, பதிவு செய்யலாம் என, தபால் துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X