கரூர்: கரூர் என்.எஸ்.கே. நகரில், பொது சுகாதார கழிப்பிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், பல மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலையில், சேதமடைந்துள்ளது. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். கழிப்பிடம் உள்ள இடங்களை தேடிச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், கழிப்பிடத்தை, கரூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து, பயன்பாட்டுக்க கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE