கரூர்: டிராக்டரில் மூடாமல் எடுத்து செல்லும் செங்கற்கள், மண் துகளால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கரூர் நகராட்சியில், பழமையான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படுகிறது. சில இடங்களில், இடிந்துபோன நிலையில் உள்ள பழமையான கட்டடங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அகற்றப்படும் கட்டடங்களின் செங்கல் மற்றும் மண் துகள், பெரும்பாலும் டிராக்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவற்றை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது கிடையாது. வாகனங்களை அதிவேகமாக இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், கட்டடக் கழிவுகளை ஏற்றிவரும்போது, அவற்றின்மேல் தார்ப்பாய் போடுவது இல்லை. இதனால், டிராக்டரின் பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் செங்கற்கள், மண் துகள் தெறித்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விதிமீறல்களில் ஈடுபடும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE