பொது செய்தி

தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தம்: கலெக்டரிடம் கூட்டமைப்பினர் கோரிக்கை

Added : டிச 15, 2020
Share
Advertisement
நாமக்கல்: 'பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர வேலையுடன், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011, நவ., 11ல், ஓவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி என, (கணினி அறிவியல், தையல், இசை உள்பட) 16 ஆயிரத்து, 549 பகுதி நேர

நாமக்கல்: 'பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர வேலையுடன், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011, நவ., 11ல், ஓவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி என, (கணினி அறிவியல், தையல், இசை உள்பட) 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்தார். தற்போது, பத்தாவது கல்வியாண்டு நடக்கிறது. மூன்றாவது கல்வியாண்டில், 2,000 ரூபாய், 6வது கல்வி ஆண்டில், 700 ரூபாய் என, உயர்த்தப்பட்டு, 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில், விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, மே மாதம் சம்பளம் இல்லை. போனஸ், பண்டிகை கால முன்பணம், 7 வது ஊதியக்குழு, 30 சதவீதம் ஊதிய உயர்வு, மகப்பேறு, மருத்துவம் விடுப்பு, இதுவரை வழங்கவில்லை. பள்ளிக்கல்வித்துறையில், பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளில், பகுதி நேர பணியாளர்கள், நிரந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட, முழுநேர வேலையுடன், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X