தெரு நாய்களால் மக்கள் பாதிப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி, ராமபுரம்புதூரில் அன்புநகர்-3 அமைந்துள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், 15க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி கடித்து துன்புறுத்தி வருகின்றன. தெருநாய்களை கண்டாலே, அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், நாய்

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி, ராமபுரம்புதூரில் அன்புநகர்-3 அமைந்துள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், 15க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி கடித்து துன்புறுத்தி வருகின்றன. தெருநாய்களை கண்டாலே, அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், நாய் துரத்தும்போது, வாகனத்தில் செல்பவர்கள், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களை காக்க, அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் செய்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், தெருநாய் கடித்து, மூன்று பேர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'அன்புநகர்-3ல் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்களை கடித்து குதறும் தெருநாய்களை பிடித்து, அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X