பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐஐடி.,யில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: சென்னை ஐஐடி.,யில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அங்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.சென்னை, கிண்டியில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., செயல்படுகிறது. இங்கு 13 மாணவர்கள் விடுதி மற்றும் ஒரு விருந்தினர்கள் மாளிகை உள்ளது. இங்கு, ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில்
chennaiiit, corona, coronavirus, covid-19, சென்னைஐஐடி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

சென்னை: சென்னை ஐஐடி.,யில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அங்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, கிண்டியில் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., செயல்படுகிறது. இங்கு 13 மாணவர்கள் விடுதி மற்றும் ஒரு விருந்தினர்கள் மாளிகை உள்ளது. இங்கு, ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என 449 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனை முடிவுகள் வந்த நிலையில், நேற்று வரை 87 மாணவர்கள்; 17 உணவக பணியாளர்கள் என 104 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர் பரிசோதனையில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 514 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.


latest tamil news



இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னை ஐஐடியில் நேற்று ஒரே நாளில் 439 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தோம். விடுதிகளில் உள்ளவர்கள், பணியாளர்களும் பரிசோதனை செய்துள்ளோம். இதில், இன்று 79 பேருக்கு கொரோனா உறுதியானது.
978 மாதிரி பரிசோதனைகளில் 25 பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்க வேண்டும். அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-202023:09:45 IST Report Abuse
Tamilan அதிகாரப்போட்டி உச்சத்தில் இருப்பதுதான் இப்படி கோவில் குளங்கள் உள்பட அணைத்து இடங்களும் கெட்டு குட்டிசுவராயிருக்க காரணம் . முதலில் அரசியல் சட்டத்தை ஒழிக்க வேண்டும் .
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
15-டிச-202023:07:37 IST Report Abuse
கொக்கி குமாரு அந்த கொரோனா வைரஸ்கள் திருட்டு திமுகவாக இருக்கும். படிப்பவர்களை எப்படி கெடுத்து குட்டிசுவராக்கவேண்டும் என்று திருட்டு திமுக வைரஸ்கள் நினைத்திருக்கலாம்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-202022:42:26 IST Report Abuse
Tamilan நாட்டிலேயே உயர்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் கூட இந்த கொடுமை . இதில் யாரை குறைகூறுவது ?. பாமரர்கள் அல்லது தொழிலாளர்களை எப்படி குறைகூறுவது ?. விஷமிகள் எங்கு வேண்டுமானாலும் நுழையலாம் என்றாலும் , படித்த தனிமனிதர்கள் , தான்தோன்றித்தனமாக செயல்படுவதையும் , ஒரு சிலர் ஒட்டுமொத்த மக்களையும் அடக்கி ஆழ நினைப்பதையும் , அரசும் கோர்ட்டுகளும் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் . அதுவும் இந்த மாதிரி நேரங்களில் ஒருங்கிணைந்த்து செயல்படுவதை விட்டுவிட்டு தங்களுக்குத்தான் எல்லையில்லா அதிகாரம் இருப்பதைப்போல் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு கொட்டமடிப்பதையும் நிறுத்தினால்தான் மக்கள் மாட்டிக்கொள்வதை தடுக்க முடியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X