* மஹாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையில் அர்ஜூன் ராம்பாலுக்கு போதை மருந்து வழக்கில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

* மே.வங்கம் பர்த்வான் மாவட்டத்தில் பா.ஜ., தொண்டர் பிரம்மாணிக் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
* உபி., மாநிலம் மொரதாபாத்தில் மாற்று மதத்தில் திருமணம் செய்ததால் கணவன் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த பெண்ணுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் கர்ப்பம் ஆகி உள்ளார்.
தமிழக நிகழ்வு
* செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் வராத ரூ.23 கோடி பறிமுதல் .
* சென்னை அருகே கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.11 லட்சம் மற்றும் 114 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டன.

* சென்னையில் உள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் வீட்டில் 3 கிலோ தங்கம், கட்டு கட்டாக ஒரு கோடி மதிப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
* சென்னை விமான நிலையத்தில் 1.23 கோடி மதிப்புள்ள தங்கத்தை ஒரு பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
* தேனி மாவட்டம் சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் சுரேஷ் என்பவருக்கு மரணத்தண்டனை விதிப்பு.
* சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிறுமி பலாத்கார வழக்கில் குரோம்பேட்டையில் வசிக்கும் மன நல டாக்டர் ராஜூ, அனிதா ஆகிய இருவர் கைது. ஏற்கனவே இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக நடப்பு !

நைஜீரியாவில் 400 மாணவர்களை கடத்தி பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE