காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்வு

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (24)
Share
சென்னை: மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை கடந்த டிச.,1ம் தேதி 50 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று (டிச.,15) மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது.தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின்
GasCylinder, Price, Hike, Rs50, காஸ், சிலிண்டர், விலை, உயர்வு

சென்னை: மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை கடந்த டிச.,1ம் தேதி 50 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று (டிச.,15) மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிச.,1ம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று முதல் மேலும் ரூ.50 உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.


latest tamil news


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று முதல் மானியமில்லாத காஸ் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.710-க்கு விற்கப்பட உள்ளது.


ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு


இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5வது முறையாக விலை ஏற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக மே, ஜூன், ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களின் முதல் தேதியில் விலை ஏற்றம் ஆகியுள்ளது. டிசம்பர் 1ம் தேதி ரூ.50 உயர்ந்து ரூ.660க்கு விற்பனையான சிலிண்டர் அடுத்த 15 நாளில் மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.710க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X