பொது செய்தி

இந்தியா

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜனவரி மாதம் இந்தியா வர உள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.ஜனவரி 26ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் டில்லியில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், வெளிநாட்டு தலைவர்கள், இந்திய அரசின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது
RepublicDay2021, BorisJohnson, ChiefGuest, India, BritainPM, Modi, குடியரசு தினம், பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன், இந்தியா, சிறப்பு விருந்தனர்

புதுடில்லி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜனவரி மாதம் இந்தியா வர உள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

ஜனவரி 26ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் டில்லியில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், வெளிநாட்டு தலைவர்கள், இந்திய அரசின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கமாகும். அந்தவகையில், இந்தியாவின் 72வது குடியரசு தின விழா 2021-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.


latest tamil news


மோடியின் அழைப்பை ஏற்று போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு குடியரசு தினம் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிகளை பின்பற்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian s -  ( Posted via: Dinamalar Android App )
16-டிச-202004:46:53 IST Report Abuse
Nepolian s ஒருத்தனையும் விடப்பிடாது
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
16-டிச-202002:05:33 IST Report Abuse
SaiBaba போரிஸ் பிரதமராக இருந்தாலும் சைக்கிளில் தான் ஊரைச்சுற்றுவார். ஒருவருக்கு என்ன தேவை என்று குறிப்பறிந்து உதவுவதில் ஆங்கிலேயர்கள் தேர்ந்தவர்கள். அதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. உதாரணத்துக்கு பக்கத்து வீட்டாரை ஒரு தகர டப்பாவைத்திறந்து தரச்சொன்னேன். அதை சிறு கூர் கூட இல்லாமல் மழித்து திறந்து கொடுத்தார். கேட்டதற்கு உங்கள் குழந்தைகள் கையில் கீறிக்கொள்ளாமல் இருப்பதற்காக என்று கூறினார்கள். இது ஒரு சின்ன உதாரணம். சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்தவர்கள் துன்பத்தைப் பார்த்து தனக்கு வந்தது போல் துன்ப படுவார்கள். இவர்களை நம் சுதந்திர வரலாறு ஏன் மோசமாக சித்தரித்தது என்று வியப்பாக இருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு பள்ளிகளில் வாரா வாரம் சிறந்த இரக்க குணம் கொண்டவருக்கான விருது கொடுக்கிறார்கள். அந்த விருதைப்பெற குழந்தைகள் போட்டி இடுகின்றன. நாளடைவில் அந்த இரக்க குணம் அவர்கள் ரத்தத்திலேயே கலந்து விடுகிறது. இங்கிலாந்தில் வாழ்ந்து விட்டு நம் நாட்டில் வாழ்வது என்பது மிகச்சிரமம். நம் நாட்டு மக்கள் மாறினால் நம் நாடும் மாறி விடும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-டிச-202023:18:01 IST Report Abuse
தமிழவேல் ஒருத்தனை வரசொல்லி சோறுபோட்டு, இளனி குடுத்து அனுப்பியது, இப்போ ஏன்டான்னு இருக்கு. இன்னொரு கோமாளிக்கு கோடியிலே செலவு பண்ணி புது செவுரு, விழா, எல்லாம் எடுத்து, இப்போ அத சங்கிகள் கூட சீண்டுறதில்ல.. ஆனா, இவரை பாக்கும்போதே....................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X